பொலிஸார் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

இனவாதத்தைத் தூண்டிவிட்டுத் தமிழர்களின் உரிமையை மறுப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருவதை வெள்ளிக்கிழமை சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து விளைவித்த குழப்பத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டன எனவும் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.