பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் சித்திரவதைக்குள்ளாகுகின்றனர் மக்கள்! இரா.சாணக்கியன் காட்டம்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையில் பெண்ணொருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை ஆணையாளர் பிரபாகரனுடனும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மிகவும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன். கடந்த வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியைச் சந்தித்தபோது மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.