மஹிந்த கூறும் விடயத்துக்கு இணங்குகிறார் சாணக்கியன்!

இரத்தக்கரை படாதவர்களுக்குப் பொறுப்பை வழங்குமாறு மஹிந்த கூறிய விடயத்திற்கு தானும் இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இரத்தக்கரை யாரின் கைகளில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் பிள்ளையான் கைகளிலே இருக்கிறது. அதைவிட மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலே இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தவுடன் நாட்டில் எவ்வாறு நிலைவரம் இருந்ததோ அதே போன்று மீண்டும் நிலைவரம் மாறியிருக்கிறது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில்.

இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த அனைத்து பிரச்சினைகளையும் தற்போது மக்கள் முகங்கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.