கிழக்கு மாகாண கைப்பந்து போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி வெற்றி!

 

நூருல் ஹூதா உமர்

இலங்கை பாடசாலை கைப்பந்து சங்கத்தால் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி மட்டக்களப்பு வௌர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

சுழற்சி (லீக்) முறையில் நடைபெற்ற இப்போட்டித்தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய கல்முனை ஸாஹிரா கல்லூரி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் நிலையைப் பெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு பயிற்சியளித்து வழிப்படுத்தி அழைத்துச் சென்ற ஆசிரியர்களான எம்.வை.எம்.றகீப், எம்.எம். றஜீப் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் ஆகியோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் எம். ஐ. ஜாபீர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.