மட்டக்களப்பின் அரச அதிபராக பதவியேற்றார் ஜஸ்ரினா யுலேக்கா!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ‘திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்’  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

32 வருடகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 13 ஆம்  திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  பதவியேற்பு நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.