பல லட்சம் வாக்குகளைப் பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் வஜிர அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓர் அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை முன்னேற்ற வேண்டிய தெளிவான பார்வை அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சியும் தங்களுடையது என தெரிவித்த வஜிர அபேவர்தன, இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.