வீதியில் பொருத்தப்பட்டிருந்த கட்டவுட் வீழ்ந்து இளைஞர் பலி

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கல்வி தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றை முன்னிட்டு வீதியில் அமைக்கப்பட்டிருந்த கட்அவுட்டில் பஸ் மற்றும் கார் மோதி கட்அவுட் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த டோன் நிபுன் தனஞ்சன என்ற 29 வயதுடைய இளைஞராவார்.

இவர் கட்அவுட்டிற்கு  அடியில் சிக்கி காயமடைந்த நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியிலிருந்து பயணித்த கார் ஒன்று மோதிய நிலையில் இரு வாகனங்களும் கட்அவுட்டின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அப் பகுதியில் இருந்த இரண்டு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.