ரயிலில் மோதியதில் குடும்பஸ்தர் பலி! கிளிநொச்சியில் துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்கறுத்துச் செல்லும் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற  ரயிலில் மோதுண்டு இலக்கம் 188 கிருஷ்ணாபுரம் பகுதியைச்  சேர்ந்த  34 வயதுடைய  கணேசன் ரமேஷ்குமார்  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளுடன் கடக்க முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.