பிரதான அரசியல் பேசுபொருளாக வற்வரி அதிகரிப்பு அடுத்த ஆண்டு அமையுமாம்! மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு

வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும். வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும்  தேர்தல் மூலம்  நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

வரி அதிகரிப்பு தொடர்பான ஊடக அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் அந்தக் கட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.