போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேகநபரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் கையகப்படுத்தல்!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் பத்துக் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சொத்து எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வீட்டின் உரிமையாளர் வெளிப்படுத்தத் தவறியதால், சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டு மாடி வீடு, சொகுசு கார், இரண்டு காணிகள் மற்றும் மூன்று மாடிக் கட்டடம் என்பன  கைப்பற்றப்பட்டன  என அந்த பிரிவு தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.