இணையம் ஊடாக நடந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

2023 ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

2022 ஆம் ஆண்டில், இணையவழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் தொடர்பில் 146,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

இதனைத் தடுப்பதற்காகப் பராமரிக்கப்படும் சர்வதேச தரவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நபரொருவர் சமூக ஊடகங்களில் அல்லது இணையத் தளத்தில் சிறுவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளியை பதிவிடுதல், பகிர்தல் அல்லது பார்வையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவாராயின் அது குறித்த தகவல் விடயத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்பட்டு, குறித்த தரவு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும்
பின்னர் குறித்த தரவு அமைப்பால், அவ்வாறான தகவல் அடங்கிய விவரங்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பப்படும்.

இந்த தரவு அமைப்பின் ஊடாக இலங்கைக்கும் இது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.