கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை

முள்ளியவளை பகுதியில் புதன்கிழமை கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும்  இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருள்கள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வருவதாக பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடம்  முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 9 பீப்பாய்கள்  மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இவை மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.