வெள்ளம் பாதித்த கிளிநொச்சி மக்களுக்கு இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் உதவி! சிறிதரன் எம்.பியின் கோரிக்கைக்கிணங்க

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் -கனடா உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து 5 லட்சம் ரூபா பண உதவிகளை செய்து வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து கிளிநொச்சி பெரியகுளம் ஐயனார் பாடசாலையில்
தங்கி இருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் நேரடியாக சென்று இந்த உலர் உணவுப்பொருள்களை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.