சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இரவு உணவு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்டப் பகுதி மற்றும் சாவகச்சேரி மகிழங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 50 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கான புதன்கிழமை இரவு நேர உணவை சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் வழங்கி வைத்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்திலும்-சீயோன் தேவாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.