சர்வதேச லயன்ஸ் கழகங்களினால்; வன்னி மாவட்ட மக்களுக்கு உதவி!

சர்வதேச லயன்ஸ் கழகங்களின் எல்.சி.ஐ.எவ். நிதியுதவியில் இலங்கை லயன்ஸ் கழகம் மாவட்டம் 301 பி1 ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் முயற்சியால் வடக்கு மாhண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸின் ஒருங்கமைப்பில் வன்னியில் வெள்ளம் பாதித்த தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 33 லட்சம் ரூபா மொத்தப் பெறுமதியில் 1000 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்;கப்பட உள்ளன.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன், ஆளுநர் செயலக உதவிச் செயலாளர் ஏகாந்தன் ஆகியோரும், லயன்ஸ் கழகம் சார்பில் ஆளுநர் சபை பிரதிச் செயலாளர் லயன் பரமேஸ்வரன், ஆளுநர் சபை ஆலோசகர்களாகிய லயன் ஜெ.ரஜீவன், லயன் சி.ஹரிகரன், லயன் கிங்ஸ்ரன் ரமேஸ் மற்றும் லயன்ஸ் கழக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்;த உதவித்திட்டத்தில் 3250 ரூபா பெறுமதியான 500 உலருணவுப் பொதிகள் கிளிநொச்;சி மாவட்டத்துக்கும், 300 பொதிகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் 200 பொதிகள் மன்னார் மாவட்டத்துக்கும் அந்தந்த மாவட்ட செயலகத்தால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.