போதைப்பொருள் கடத்தல் தம்பதியினரின் வீட்டிலிருந்து 3 கோடி ரூபா சொத்து மீட்பு!

கம்பஹா – பெம்முல்லை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினரின் வீட்டிலிருந்து மூன்று கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்களது வீட்டை சோதனையிட்ட போது 2 பஸ்கள், 2 சிறிய லொறிகள், முச்சக்கர வண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.