15 மாதங்களில் 45 சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம்! நீதி அமைச்சர் பெருமிதம்

நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை  புதுப்பித்திருக்கிறோம்.  எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

இந்த சமூகம் அனைத்துதுறைகளிலும் சீரழிந்துவிட்டது, இது ஓரிரு நாளில் நடந்ததல்ல. சமூக ஒளிபரப்பில் நீண்ட நாள்களாக நடந்து வந்த ஒன்று. தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையை மாற்றியமைக்கவே எங்களுக்குத்; தேவையாக இருக்கிறது.அதனால் நாங்கள் நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை  புதுப்பித்திருக்கிறோம்  எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

கிராமமும் கோயிலும் என்ற கருத்து இப்போது மாறிவிட்டது. மற்ற மதங்களிலும் அப்படித்தான், பணத்தின் அடிப்படையிலான சமுதாயம் தான் இந்தக் காலத்தில் உருவாகி இருக்கிறது.

போதைப்பொருள் சமூகத்தை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தை நாங்கள் நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். அதனால்தான் நீதி அமைச்சு என்ற வகையில், சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான  அடித்தளத்தை அமைத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாக , சமுதாயத்திற்காக உழைக்கும் முன்மாதிரியான மற்றும் பொறுப்பான நபர்களுக்கு சமாதான நீதிவான் பதவிகளை வழங்க நாங்கள் தீர்மானித்தோம்.

1978 நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதுபோன்று, நீதி அமைச்சருக்கு சமாதான நீதிவான்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நியமனங்களை நாங்கள் கண்டபடி வழங்க மாட்டோம்.

என்றாலும் கடந்த காலங்களில் தேவையற்ற நபர்களுக்கும் சமாதான நீதிவான் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான நபர்கள் சிலரின் நியமனங்களை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்தோம். -என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.