கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி: பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா பொலிஸாரால் அழிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.