மன்னம்பிட்டியில் பாலத்துக்குள் வாகனம் குடைசாய்ந்து விபத்து

பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக கூலர் வாகனமொன்று ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது.

ஞாயிறு நண்பகல் மன்னம்பிட்டியில் உள்ள பாலத்துக்கருகில் வைத்து வாகனத்தின் டயர் வெடித்ததில் பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது.

எனினும், வாகன சாரதியின் துரித செயற்பாடு காரணமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படாத நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்விபத்து காரணமாக இந்த பாலத்தின் ஊடான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.