மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள்கள் விற்பனை! மருந்தகத்தின் உதவியாளர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள மருந்தகம் ஒன்றில் உதவியாளராகக் கடமையாற்றும் சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலகவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே குறித்த நபர் வஸ்கடுவ பிரதேசத்துக்கு அழைக்கப்பட்டு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.