கடல் கடந்த சொத்துக்கள் இல்லை என்றால் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம்! சம்பிக்க சாட்டை

கடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் தரவுக் களஞ்சியத்தில் கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கை அமைச்சர் டிரான் அலஸ் என சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பண்டோரா பேப்பர்ஸ் மூலம் அடையாளம் காணப்பட்ட கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக வெளியான குறித்த அறிக்கை பொய் அது தவறு என்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இதேநேரம் குறுகிய காலத்திற்குள் முழு வரி நடைமுறையையும் டிஜிற்றல் மயமாக்கியிருந்தால் வருமானத்தை 50 வீதத்தால் அதிகரித்திருக்க முடியும், 900 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரிகள், அபராதம் மற்றும் வட்டியை திரும்பப் பெற அரசாங்கம் தவறிவிட்டது.

பாதாள உலகத்தை குறிவைத்து, குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பலை இலக்கு வைத்து, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கொண்டுள்ள அதியுயர் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பதவியை பெற்றுக்கொள்ளும் ஒரு பிரசாரமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.