சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தை விற்பனை செய்த ஒருவர் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 3 கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.