கொவிட் உப வைரஸிவிருந்து பாதுகாப்புப் பெற வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கவேண்டும்!  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாகப் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

நாட்டுக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படும்  கொவிட் வைரஸின் புதிய வகை தொடர்பாக சுகாதார துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1 நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை   விரைவாக  பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைக்குரிய குழுவினர் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இதற்கு முன்னர் செயற்படுத்திய கொவிட் சுகாதார வழிகாட்டல்களை மீண்டும் செயல்வலுப்படுத்துவதற்காக விரைவாக செயற்படுத்துவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

அத்துடன் இந்த புதிய கொவிட் பிறழ்வு உப வகை தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டிய ஒன்று  என உலக சுகாதார அமைப்பு கருத்துத் தெரிவித்திருக்கிறது. கொவிட் உலக தொற்று நிலைமையில் இருந்து மீண்டாலும் இவ்வாறான அலகு வகைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படக்கூடும். அதனால் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி. இது தொடர்பாக இருந்துவரும் எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு செய்வது முக்கியமாகும்.

குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய குழுவினருக்காவது முகக்வசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற சுகாதார செயற்படுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு விரைவாக அறிவுறுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.