புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி அனுஷ்டிப்பு!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்’  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம்  பொன்னாலை பகுதியிலும் விஜயகாந்துக்கு  கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.