மாமனிதர் நடிகர் விஜயகாந்தின் இழப்பிற்கு ஈழத்தின் ‘மூச்சு’ படக்குழுவினர் இரங்கல்!

நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு ஈழத்தின் ‘மூச்சு’ படக்குழுவினர் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மூச்சு திரைப்படத்தின் இயக்குநரும்-நடிகருமான கலைஞானி குமரநாதன் அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில்;  தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

இயற்கை எய்திய நடிகர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் கலியுக வரதனாக விளங்கியவர். ஏழைகளின் காப்பாளனாக விளங்கியவர். அவர் மறைந்தாலும் ஏழைகளினதும் இரசிகர்களினதும் மனங்களிலே நிலையாக வாழ்ந்துகொண்டிருப்பார். ஒரு கலைஞன் மரணித்தாலும் கலையினூடு அவன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்பது நடிகர் விஜயகாந்த் மூலமாக உண்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் மூச்சு படக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன். – என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.