நாடாளுமன்றில் பேசும் வார்த்தைகள் தெரியும் மக்கள் மத்தியில் கண்ணியமாகப் பேசுங்கள்! கஜேந்திரனுக்கு கடற்றொழிலாளர்கள் சாட்டை

நாடாளுமன்றத்தில் நீங்கள் என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால் பொது அமைப்புகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம்  வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ‘காடையர்கள்’ என கடற்றொழிலாளர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியமைக்கும் இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.