தம்புள்ளை ஹோட்டல் அறையில் இருந்து சந்தேகத்துக்குரிய வாகன தகடுகள் சிக்கின

தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள இரு வர்த்தகர்களுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போது அறையொன்றிலிருந்து பல வாகனத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த ஹோட்டலில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் இதற்கு முன்னர்  பல முறை போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இங்கு போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் இந்த இலக்கத் தகடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெறாததால் இவை வாகனங்களை விற்பனை செய்வதற்கோ திருடுவதற்கோ அல்லது வேறு குற்றச்  செயல்களுக்கோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , தம்புள்ளை பகுதிகளில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.