பிலியந்தலை பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: உரிமையாளரும் இரண்டு பிள்ளைகளும் காயம்! பொருள்கள் நாசம்

பிலியந்தலை மாவித்தபுரவில் வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத பட்டாசு  உற்பத்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டில் பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளுக்குத் தேவையான ஏனைய பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வருடத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில்  பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.