தங்க பிஸ்கெட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  வெளியேறும் முனையத்தில் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தின் பணியாளர்கள் வெளியேறும் வாயில் வழியாக வெளியேறும்போது கைது செய்யப்பட்டார் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 66 தங்க பிஸ்கட்டுகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட தங்கம் 7 கிலோ 700 கிராம் எடையுடையது எனவும், இதன் பெறுமதி பல கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர் என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.