சாவ.நுணாவில் சிறுவர் பூங்காவிற்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்!

சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் சிறுவர் பூங்காவிற்கு நகரசபை முன்னாள் உறுப்பினர் அமரர் யோ.ஜெயக்குமாரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் 27-12-2023 புதன்கிழமை ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாவகச்சேரியின் முன்னாள் உறுப்பினரும்,தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தின் முன்னாள் தலைவருமான அமரர் யோ.ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள்,
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் நடனதேவன்,தென்மராட்சி அபிவிருத்திக்கழக பிரதிநிதிகள்,சாவகச்சேரி நகரசபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.