போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இந்நிலையில், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

இதன் பின்னர்  நீதிமன்றத்தால் அவரை  கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இரண்டாவது நாளாக வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக சென்றிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, புதன்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.