நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன புதன்கிழமை மாலை 2 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்றதைத் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கேட்டறிந்தார்.

மேலும், இச்சந்திப்பின்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.