இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் விடுத்தார்! தமிழ் அரசியல்கைதி தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார் மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் என்னை முழங்காலில் இருத்தினார். உண்மையைச் சொல்லுமாறு என்னை அச்சுறுத்தினார். துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி  எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை  அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் என்னை 2019 ஜனவரி 8 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸார் கைதுசெய்தனர். ஏனைய 11 அரசியல் கைதிகளுடன் நான் தடுத்துவைக்கப்டேன் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார். விடுதலைக்கான கையெழுத்துக்களைப் பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்கச் செய்தனர் வரிசையாக நிற்கவைத்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரீசேர்ட் அணிந்த தொப்பி அணிந்திருந்த நாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவங்கள்குறித்து கேள்வி எழுப்பினார். நான் எனக்கு சிங்களம் தெரியாது எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் கைத்துப்பாக்கியை எடுத்து எனது நெற்றியில் வைத்து நான் பொய் சொல்கின்றேன் எனத் தெரிவித்து என்னை மிரட்டினார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.