வெலிகமவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சப் இன்பெக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி!

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் 1.7 மில்லியன் ரூபாவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் 1.7 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டமையும் தெரிந்ததே.

சோதனையின்போது மற்றொரு பொலிஸ் குழுவால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.