வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் புதுக்குடியிருப்பில் இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதை பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த வேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் நான்கும், ஐஸ் போதைப்பொருள் 600 மில்லி கிராம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரையும் சான்று பொருள்களையும் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.