தமிழ்ப் பெண் வைத்தியர் நோர்வேயில் படுகொலை!

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நோர்வேயின் எல்வெரும் என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்தன எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.