கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தயாசிறிக்குத் தடையுத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்  துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை வழங்குவதையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.