புஞ்சா’வும் அவரது சகாவும் போதைப்பொருளுடன் கைது! ஹிக்கடுவையில் வைத்து

ஹிக்கடுவை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த ‘புஞ்சா’ மற்றும் அவரது சகா ஒருவர் ஹிக்கடுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் என்ற புஞ்சா மற்றும் அவரது சகா சுதீஷ் ஆவர்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஈஸி காஷ் மூலம் பணத்தை வைப்பு செய்து ஐஸ் போதைப்பொருள்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர் எனப் பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனக் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.