புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரத்துடன் மூவர் கைது! வைத்;தியர் உள்ளடக்கம் ; இரு வாகனங்கள் பறிமுதல்

வவுனியாவில் திங்கட்கிழமை காலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம், அவர்கள் பொலிஸார் என்று அடையாளம் காணாமல் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

34 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 31 வயதுடைய வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.