நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுபாடு தொடர்கின்றது! டிலான் பெரேரா சுட்டிக்காட்டு

 

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை இனவாதம் மற்றும் மதவாதம் பற்றியே நாம் பேசுகிறோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்சினையாக இது உள்ளதுடன் இன, மதப் பிரச்சினைகளுக்கு அப்பால் சாதிய ரீதியாக மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் அரசியலிலும் இந்தப் பிரச்சினை காணப்பட்டது. ஆனால், இந்த சாதிய முறையை உடைத்தெறிந்து அதனை சவாலுக்கு உட்படுத்திய ஒரே தலைவராக ரணசிங்க பிரேமதாஸ காணப்படுகிறார்.

ஆனால், வேறு எந்தவொரு தலைவராலும் இதனை செய்ய முடியாது போனது. ஆகவே, நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக காலங் காலமாக தொடரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுவொன்றைப் பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.