தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!

அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள்  இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகவீன விடுமுறைபோராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதுடன்  வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் புதன்கிழமை பணிக்கு சமுகமளிக்காமையால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்துள்ளன.

குறிப்பாக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே, அரசாங்கத்தின் அநீதியான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ஈ.சி.ஜி. தொழில்நுட்ப நிபுணர்கள், ஈ.ஈ.ஜி. தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.