பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை

மண் சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஹாலி-எல 7 ஆவது மைல் கட்டை பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு  இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பஸ் சேவை நடைபெறுகிறது. அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.