இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் கௌசல்ய?

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌல்ய நவரடண தலைமைப்பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதேநேரம், செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி சத்துர கல்ஹேன வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த தெரிவுக்கான தேர்தல் அதிகாரியாக அலுவலராக சொலிஸ்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திக தேமுனி டி சில்வா செயற்படவுள்ளார்.

இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் புதன்கிழமை மாலையில் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வேறெந்த வேட்பு மனுக்களும் குறித்த பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காத நிலையில், தற்போதைய நிருவாகத்தினரே ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.