நாடு நிதி வங்குரோத்தடைவு என்று அறிவிக்கப்படவில்லை! மஹிந்த சிறிவர்த்தன கூறுகிறார்

நாடு நிதி வங்குரோத்து அடைந்தது என்று அறிவிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

உண்மையில் நிதி வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட கடன் சிறிது காலத்துக்கு பிற்போடுமாறு கடன் வழங்குநர்களிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம்.

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித்திட்டத்திற்குச் செல்லும்போதே கடன் உதவித் திட்டத்துக்குச் செல்கின்றோம். அதனால் எமக்கு கால அவகாசம் வழங்குமாறே கோரினோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.