வவுனியா தாண்டிக்குளம் பாடசாலையில் திருட்டு! பொலிஸார் விசாரணை

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டமை தொடர்பில்  பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்  பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணோளிகளையும் பரிசோதித்தனர்.

இதன்போதே கடந்த வெள்ளிக்கிழமை 15வயதுடைய சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியை தூக்கிக் செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. இந்தக் காடசிகளின்அடிப்படையில்  சந்தேக நபரான சிறுவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.