தெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்து எரிந்தது தனியார் பயணிகள் பஸ்!
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் எந்தவித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்; எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்ததில் பஸ் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பிடித்மைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பெலியத்தயில் இருந்து கசாகல வரையான அதிவேக வீதி மூடப்பட்டுள்ளதுடன் கசாகலயில் இருந்து வரும் வாகனங்கள் பெலியத்த நுழைவாயில் வழியாக செல்ல முடியும் என பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை