தேயிலை உரங்களின் விலை 2 ஆயிரம் ரூபாவால் குறைப்பு! மஹிந்த அமரவீர தகவல்

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ரி 750, ரி 709 மற்றும் ரி 200 தேயிலை உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை முன்வைத்துள்ளார்.

இதன்படி சந்தையில் உள்ள தேயிலை உரங்களின் விலை 100 இற்கு 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள தேயிலை உரங்களின் ஒரு மூடையின் மொத்த விலை 13 ஆயிரம் ரூபாவாகும்.

இந்நிலையில் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ரி 750 மற்றும் ரி 709 உரங்களின் ஒரு மூடை விலை 7,735 ரூபாவாகவும் ரி 200 உரத்தின்  ஒரு மூடை விலை 5,500 ரூபாவாகவும் குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த 2,000 ரூபா உரச்சலுகைகள் அனைத்து தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து உரங்களின் வகைகளும் தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு 9,735 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது.

இந்த உரச்சலுகைகளுக்கு மேலதிகமாக தேவைப்படும் 1,200 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலை சபை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.