யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு 64 ஆயிரம் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு! யாழ்.வர்த்தக தொழில் துறை மன்றத் தலைவர் தெரிவிப்பு

லங்கா எக்கிபிஷன்  நிறுவனம், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகவுள்ளது என யாழ். வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இது தொடர்பாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

கண்காட்சியில் சிறந்த தொழில் முயற்சியில் ஈடுபடும் மூதலிட்டாளர்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையிலான கண்காட்சியாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இம்முறை 64 ஆயிரம் பேர் கொண்ட பார்வையாளர்களாக வருவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் 350 காட்சிக் கூடாரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கட்டட துறை பகுதி, தொழில்நுட்ப பகுதிகள், கணணியல் துறை பகுதிகள், உள்ளூர் உற்பத்தி காட்சிக் கூடாரங்கள், வெளிநாட்டு கல்வியியற் பிரிவுகள், தனியார், அரச, கல்வியியற் காட்சிக் கூடங்கள், வாகன விற்பனை சந்தைகள், சிற்றுண்டி வகைகள், மின்னியல் சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருள்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும் சிறு முயற்சியாளர்களுக்கு  10 இலவசமாக கூடாரங்களும், தொழில்முனைவோர்களுக்கும் 10 இலவசமாக கூடாரங்களும் வழங்கப்படுகின்றன. சிறிய முதலீட்;டை கொண்டுள்ளவர்களுக்கு முன்னுரை அடிப்படையில் இவை வழங்கப்பட்டுள்ளன

இந்த பிரதேசத்தில் சிறந்தமூதலீட்டினை ஊக்குவிப்பதை ஓர் இலக்காகக் கொண்டு 14  ஆவது ஆண்டு வர்த்தக் கண்காட்சி விளங்குகின்றது.

இம்முறை 2000 பேர் அளவிலான தென்னிலங்கை முதலீட்டாளர்களும் இங்கு வந்து தமது சந்தைவாய்ப்பை மேற்கொள்ளவுள்ளனர். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.