விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு 100 ட்ரோன் சாதனங்கள் வழங்கல்!

விவசாயத் துறையின் நவீனமயமாக்கலுக்கான திட்டமாக 25 கோடி ரூபா பெறுமதியான 100 ட்ரோன் சாதனங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த ட்ரோன் சாதனங்கள்  திட்டத்தின் மூலம் பயிர்களுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விசுறுவதற்கு இலகுவாக பயன்படுத்த முடியும்.

இந்த ட்ரோன் சாதனங்கள் இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம், குருநாகல், அம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய மத்திய நிலையங்களுக்கு இந்த ட்ரோன் சாதனங்கள் வழங்கப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.