இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்துமாம்! கூறுகிறார் சுமந்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு திருகோணமலையிலே இடம்பெற இருக்கின்றது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என நானும் அறிகின்றேன்.

நானும் தலைவர் பதவி போட்டியிலே இருக்கும் காரணத்தால் இந்த ஆயத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பாக வினவிக்கொண்டு இருக்கிறேன்.

பொதுச்சபையிலே அங்கம் வகிப்பவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டதாக தற்போது பொதுச்சபையிலே இருக்கின்ற பொதுச்செயலாளர் மூலம் அறிந்திருக்கின்றேன். ஆகவே திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி இந்தத் தேர்தல் உச்சக் கட்டமாக உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முகமாக திருகோணமலையில் நடைபெற்று நல்லதொரு முடிவு வருமென நாம் எதிர் பார்க்கின்றோம். – என மேலும் தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.